சீன மொழியில் ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
By Chandru
ஹாலிவுட் படங்களை பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டு அதுபோன்ற கதைகளை தமிழில் இயக்கும் இயக்குனர்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழ் படம் ஒன்றை சீனா மொழியில் ரீமேக் செய்திருப்பது தற்போது நடந்திருக்கி றது. மலையாளத்தில் வெளியான த்ர்ஷயம் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இப்படம் தமிழில் பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது.
இதில் கமல், கவுதமி நடித்திருந்தனர். பின்னர் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும், இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பிலும், கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும் இதேபடம் ரீமேக் ஆகி வெளியானது. எல்லா மொழியிலும் படம் ஹிட் ஆனது. இப்படத்தை மலையாளம் மற்றும் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார்.
தற்போது த்ரிஷ்யம், அதாவது பாபநாசம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஷீப் வித்தவுட் ஷெபெர்ட் (Sheep Without A Shepherd) என பெயரிடப்பட்டிருக்கிறது. வரும் 20 ஆம் தேதி சீன மொழியில் படம் வெளியாகிறது.
சமீபத்தில் இப் படத்தின் டிரெய்லர் வெளியிடப் பட்டுள்ளது. சீன மொழியில் நடிகர்கள் யாங் சியோ, சுஹோடன், ஜோன் சென் சுஹோடன் நடித்திருக்கின்றனர்.