சரவணபெலகோலா பாகுபலிக்கு 1008 குடங்களில் அபிஷேகம்!

கர்நாடக மாநிலம், சரவணபெலகோலாவில் உயர்ந்து நிற்கும் ஒற்றைக்கல் சிற்பம் `கோமதேஸ்வரா’ என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றது. அந்தச் சிலைக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமஸ்தகாபிஷேகம் நடைபெறும்.

பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடந்துவரும் விழாவின் முக்கியப் பகுதியான புனித நீராடல் 17-ம் தேதி தொடங்கியது. இந்த விழா, வரும் 25-ம் தேதி வரை நிகழும்.

சரவணபெலகோலாவில் நடைபெறும் புனித நீராடல் நிகழ்வுக்கு, சமணத் துறவிகள் 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சிலைக்கு 1,008 குடங்களில் பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்தச் சிலை ‘பாகுபலி’ என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More News >>