சமந்தா மறுத்த வாய்ப்பை ஏற்ற அஞ்சலி.. என்ன ஆச்சு சமந்தாவுக்கு...

பிரபல ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ளயுடர்ன், ஓ பேபி போன்ற படங்களில் நடித்தார்.

இந்தியில் அமிதாப், டாப்ஸி நடித்த 'பிங்க்' படம் (தமிழில் அஜீத், ஷ்ரத்தாஸ்ரீநாத் நடித்த நேர் கொண்ட பார்வை) தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அமிதாப் ஏற்று நடித்த வழக்கறிஞர் வேடத்தை தெலுங்கில் பவன் கல்யாண் ஏற்கிறார். அதேபோல் டாப்ஸி வேடத்தை சமந்தாவை ஏற்க கேட்டனர். அவர் ஏற்க மறுத்துவிட்டார்.  

பிங்க் ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன் என்று கேட்டபோது, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் சமந்தா இனி நடிக்க  விரும்பவில்லை. அடுத்த சில மாதங்களுக்கு உடற்பயிற்சியிலு, குடும்பத்திலும் அதிக கவன செலுத்த உள்ளாதால் நடிக்க மறுத்திருக்கிறாராம். சமந்தா ஏற்க மறுத்த வேடத்தில் அஞ்சலி நடிக்கிறார்.

More News >>