ரஜினியின் தர்பார் படத்தை கைப்பற்றிய நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரித்துள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குபிறகு கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினியின் அசத்தல் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் உரிமையையார் கைப்பற்ற போகிறார்கள் எனற எதிர்பார்ப்பு இருந்தது.
தற்போது ரிலைன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் உரிமையை கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு முன்பாக ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என்று தெரிகிறது.