விஜய் 65 படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனரா? தனுஷ் பட இயக்குனர் பெயர் அடிபடுகிறது..

பிகில் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் விஜய். தளபதி 64 பெயரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த படத்துக்கான பேச்சை விஜய் தரப்பு தொடங்கியிருக்கிறது. மீண்டும் அட்லி உடன் இணைவார், ஷங்கருடன் இணைவார், முருகதாஸுடன் இனணவார் என்று பேசப்பட்ட வந்த நிலையில் தற்போது மற்றொரு இயக்குனர் பெயர் அடிபடுகிறது.

விஜய்யின் 65வது படமாக உருவாகும் இதனை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அசுரன் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற விருக்கிறார்களாம்.

More News >>