விஜய் நடித்த பிகில்: மீண்டும் சிலை வைத்து கொண்டாட்டம்.. ராயப்பன் பாத்திரத்துக்கு வந்த மவுசு
தளபதி விஜய் நடித்த பிகில் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி ரிலீஸ் ஆனது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தலா 20 கோடி, வெளிநாடுகளில் 100 கோடி, தமிழகத்தில் 140 கோடிக்கும் என உலகம் முழுக 300 கோடி வசூலித்தது.
இப்படம் 50 நாட்களை கடந்துள்ளதை சமீபத்தில் அப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்தார். அதை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் சென்னை ரோஹினி திரையரங்கில் மீண்டும் பிகில் படத்தை பார்த்து ஆரவாரம் செய்தனர். பிகில் படத்தில் அதிகம் பேசப்பட்ட ராயப்பன் கதாப்பாத்திர சிலையை நிறுவி செல்பி எடுத்துக்கொண்டனர்.
இப்படம் வெளியானபோது கேரளாவில் இதேபோல் ராப்யபன் கதாபாத்திர சிலையை கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.