ரஜினிகாந்த் நடிக்கும்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தின் டீஸர் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் காலா. இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில், நானா படேகர், சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இசைப் பணியை ரஞ்சித் படத்திற்கு தொடர்ந்து இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் ஏற்றுள்ளார். இந்நிலையில், படத்தில் டீஸர் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீங்கள் எல்லாம் காத்துக் கொண்டிருந்த செய்தி...காலா திரைப்படத்தின் டீசர் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகிறது. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காண காத்திருங்கள். இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ’காலா’ திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More News >>