ராணுவ தலைமை தளபதியாக முகுந்த் நரவனே நியமனம்..

அடுத்த ராணுவ தலைமை தளபதியாக முகுந்த் நரவனே நியமிக்கப்படுகிறார்.

ராணுவ தலைமை தளபதியாக உள்ள விபின் ராவத், இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். தலைமை தளபதிக்கு சீனியாரிட்டி அடிப்படையில்தான் பெரும்பாலும் நியமனம் செய்யப்படும். அந்த வகையில் தற்போது துணை தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கப்பட உள்ளார். அவரது நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முகந்த் நரவனே துணை தலைமை தளபதியாக பொறுப்பேற்கும் முன்பு, ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதியாக பதவி வகித்தார். இந்தியா-சீனா இடையேயான சுமார் 4,000 கி.மீ. தூர எல்லையை பாதுகாக்கும் பணிக்கு பொறுப்பு வகித்தார். ராணுவத்தில் 37 ஆண்டு கால அனுபவம் உடைய நரவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள விபின் ராவத், முப்படை தளபதியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

More News >>