போலீஸ் வேடத்தில் நடிக்க பிடிக்காது  தர்பார் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு

ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் கூறியதாவது:

ஒருசமயம் அமிதாப்புடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் 60 வயதுக்கு பிறகு 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். உடற்பயிற்சி செய்ய வேண்டும், எந்நேரமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அரசியலில் நுழையக் கூடாது என கூறினார். இதில் உடற்பயிற்சியை நான் தினமும் மேற்கொள்கிறேன். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். இந்த இரண்டு விஷயங்களை செய்ய முடிந்த என்னால் அவர் சொன்ன மூன்றாவது விஷயத்தை பின்பற்ற முடியவில்லை.

ரஜினி ஸ்டைல் என்று எதை சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் எல்லாவற்றையும் சாதாரணமாகத்தான் செய்கிறேன். போலீஸ் வேடத்தில் நடிக்கவே எனக்கு பிடிக்காது அப்படி நடித்தால் கிரிமினல்கள் பின்னால் ஓட வேண்டியிருக்கும். சந்திரமுகி, குசேலன் போன்ற ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். 40 வருடத்தில் 160க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துவிட்டேன்.

எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். குடியுரிமை சட்டம்பற்றி கேட்கிறார்கள். இது சினிமா மேடை அதுபற்றிய எனதுகருத்தை வேறுவொரு தளத்தில் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

இந்த டிரெய்லரில் ரஜினியின் ஸ்டைலான நடை, லுக் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒரினலாவே நான் வில்லம்மா, ஐயம் ஏ பேட் காப் (நான் கெட்ட போலீஸ்) போன்ற வசனங்கள் டிரெய்லரில் கலக்குகிறது.

More News >>