சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் சிலையாகும் காஜல் நேரில் காண விமானத்தில் பறக்கிறார்.
சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சி யகத்தில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டோனா, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா. இங்கிலாந்து ராணி எலிசெபத், நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஜாக்கிசான், ஐஸ்வர்யாராய் போன்றவர்களுக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது.
முதன்முறையாக தென்னிந்திய நடிகை ஒருவருக்கும் அங்கு மெழுகு சிலை வைக்கப்படுகிறது. அந்த பெருமையை தட்டிச் சென்றிருக்கிறார் காஜல் அகர்வால். ஆம், இவருக்குத் தான் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. மெழுகு சிலை வைக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார் காஜல் அகர்வால்.
இதுபற்றி அவர் கூறும்போது,' சிங்கப்பூர் மேடம் துஸாட்ஸ் மியூசியத்திற்கு சிறுவயதில் நான் செல்லும் போது அங்குள்ள தலைவர்களின் மெழுகு சிலைகளை கண்டு ரசித்திருக்கிறேன். ஆனால் அந்த இடத்தில் எனக்கும் ஒரு மெழுகுசிலை வைப்பார்கள் என்று கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை. பெரியவர்களுக்கு மத்தியில் எனது மெழுகு சிலையும் இடம் பெறுவதில் மகிழ்ச்சி. வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி நேரில் சிலை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நானும் அதில் பங்கேற்கிறேன்' என்றார்.