திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர்.. கன்னியாகுமரி சிலைபோல் போஸ் தந்தார்..

திறமை விழா, திரைப்படம், வெப் சீரிஸ்  என  7 படைப்புகளை ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த்தின் பிளாக் ஷீப் யூ டியூப் சேனல்  உருவாக்குகிறது.  இதில் இடம் பெறும் வெப் சீரிஸில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கிறார்.

கிரிக்கெட் வீரர்கள் திடீரென்று சினிமாவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விக்ரம் நடிக்கும் புதிய படமொன்றில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார். அதேபோல் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  நடிகர் சந்தானத்துடன் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரே  திருவள்ளுவராக நடிக்க  தமிழ் வெப் சீரிஸ் ஒன்று உருவாகிறது. இதற்காக ஹர்பஜன் சிங்கிற்கு கன்னியாகுமரியல் பல அடி உயரத்தில் நிற்கும் திருவள்ளுவர் சிலை போல் வேடம் அணிவித்து அதேபோல்போஸ் தரச் சொல்லி புகைப்படமும் எடுத்தனர். வேஷ பொருத்தம் செம தூள்.

இந்த வெப் சீரிஸை டியூட் விக்கி இயக்குகிறார். வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் யூ டியூப் சேனிலில் ஒளிபரப்பாகிறது.

மேலும் பள்ளி மாணவர்களை உணர்வுகளை  மைய மாக வைத்து புதிய திரைப்படம் உருவாகிறது. இதனை முருகானந்தம் தயாரிக்கிறார். அயாசு, மைக் செட் ஸ்ரீராம் ஹீரோக்களாக நடிக்கும் இப்படத்தை ராஜ்மோகன் இயக்குகிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை இயக்கியவர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டாக்டர் சேது நடிப்பில் கார்த்தி வேணுகோபால் இயக்கும் புதிய வெப் தொடரும் உருவாகிறது. இந்த 7 நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் அறிவிக்கும் விழா சென்னையில் உள்ள போரம் அரங்கில் நடந்தது.  இதில் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் சேரன், விஜய்சந்தர், நாஞ்சில் சம்பத், நடிகர் சியோ போன்றவர்கள் கலந்துகொண்டு ஒவ்வொரு நிகழ்வையும் தொடங்கி வைத்தனர்.

More News >>