பார்க்க பார்க்க சாப்பிடத்தூண்டும் இறால் ஊறுகாய்..

ஊறுகாய் வகைகளில் மாங்காய், எலுமிச்சம், தக்காளி, கேரட் என பல வகைகள் உண்டு. இவை அனைத்தும் காய்களால் செய்யப்படுகிறது. ஆனால், அசைவத்தில் ஊறுகாய் செய்து பார்த்திருக்கிறீர்களா.. ?? அதுவும், இறாலில்.. பார்க்க பார்க்க சாப்பிடத்தூண்டும் இறால் ஊறுகாய் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.. ??

சமைக்க தேவையானவை

கறிவேப்பிலை - சிறிதளவு சக்கரை - 1 ஸ்பூன் உப்பு - தேவைகேற்ப வினிகர் - 2 கப் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் வெந்தயம் - 3 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் பூண்டு - 3 ஸ்பூன் இஞ்சி - 3 ஸ்பூன் கடுகு - 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய் - 1/2 கப் இறால் - 300

உணவு செய்முறை

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, 1 ஸ்பூன் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து தவாவில் வதக்குங்கள். வதக்கிய இறாலை மிதமான தணலில் நல்லெண்ணையில் பொறித்தெடுக்கவும். வெந்தயத்தை சிறிதளவு வினிகரில் ஊறவைத்து இதனுடன்.கடுகு, சீரகம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும்.

இந்த கலவையை அரைக்கும்போது தண்ணீருக்கு பதிலாக வினிகரை பயன்படுத்தவும் . ஒரு தாவாவில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, அரைத்த மசாலா,உப்பு, சிறிதளவு வினிகர், பொறித்தெடுத்த இறால் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

மசாலா கலவை நன்றாக வதங்கி, கெட்டிப்பட்டதும் அடுப்பிலிருந்து இறக்கி இறுதியாக சக்கரை சேர்க்கவும். இறால் மசாலா ஊறுகாய் ஆறியபிறகு, அதனை ஈரமில்லாத பாட்டில்களில் சேமித்துவைக்கவும்.

More News >>