பாம்பு வளர்த்த அஜீத் மேனேஜர்
தல அஜீத்குமாரின் மேனேஜராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் சுரேஷ் சந்திரா. அவரது உதவியாளர் நாசர். இவர்கள் திரைப்படங்களுக்கு பிஆர்ஓக்களாகவும், நடசத்திர நிகழ்ச்சிகள் என்படும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிகழ்வுகளையும் நடத்துகின்றனர்.
வன விலங்குகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்ற விதிகள் உள்ளன. ஆனால் சுரேஷ் சந்திராவும், நாசரும் 3 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தனர். அதற்கு எலிகளை உணவாக அளித்து வந்திருக்கின்றனர்.
இந்த விஷயம் சமீபத்தில் வெளியானது வனதுறை அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாக தகவல் சென்றது. உடனடியாக அதிகாரிகள் நேரில் வந்து அவர்களிடமிருந்து பாம்பை கைப்பற்றினர். வனவிலங்கு சட்டபடி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.