தமிழில் வரும் பிறமொழி படங்கள்.. ஊர் சுற்றி பார்க்க வரும் அல்லி..
பாகுபலி, அருந்ததி, பரத் அனே நேனு போன்ற படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன.
அதேபோல் சமீபத்தில் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த மாமாங்கம் மலையாள படம் அதே பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் மலையாளத்தில் வெளியான சோழா என்ற படம் தற்போது தமிழில் அல்லி என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
மலையாள இயக்குனர் சனல்குமார் சசிதரன் இயக்கி உள்ளார். நிமிஷா, ஜோஜு ஜார்ஜ், அகில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கிராமத்திலே வளர்ந்த பெண்ணுக்கு நகரத்தின் அழகையும். அதன் பரபரப்பையும் நேரில் காண வேண்டும் என்ற ஆசை வருகிறது. இதையடுத்து தனது நண்பன் உடன் நகரத்துக்கு புறப்பட்டு செல்கிறாள். அப்போது நண்பனின் முதலாளியும் அதில் சேர்ந்துகொள்கிறார். நகரத்தை சென்றடைவதற்குள் அப்பெண் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதை சொல்லும் விதமாக இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. முழுகதையும் ஒரே நாளில் நடப்பதுபோல் காட்சிகளி படமாகி உள்ளது.