ஆன்லைனில் லீக் ஆன மம்மூட்டி நடித்த சரித்திர படம்
மம்மூட்டி, இனியா மலையாளத்தில் நடித்துள்ள படம் மாமாங்கம. தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இப்படம் உருவானது. சமீபத்தில் அனைத்து மொழியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. கேரளாவில் நடந்த மாமாங்கம் என்ற பழங்கால விழாவை மையமாக வைத்து சரித்திர பின்னணி படமாக உருவானது.
படம் வெளியான 2 நாட்களில் மாமாங்கம் படம் இணைய தளத்தில் லீக் ஆனது. அனுமதியில்லாமல் படத்தை நெட்டில் வெளியிட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் புகார் தரப்பட்டதையடுத்து திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.