வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு..

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போரட்டத்தில் கலவரம் வெடித்தது. பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். மேலும், பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கினர். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு்ள்ளனர். மேலும், வடகிழக்கு மாவட்டத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடையுத்தரவு இன்று ஒரு நாளைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.

More News >>