நேரடியாக டிஜிட்டல் தளத்துக்கு வந்த படம்.. டைரக்டர் வெங்கட்பிரபு அதிரடி..
நேரடியாக டிஜிட்டல் தளங்களில் படங்களை வெளியிடக்கூடாது, தியேட்டரில் வெளியிட்ட பிறகுதான் டிஜிட்டல் தளங்களில் வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையே ஏற்கனவே பிரச்னை நடந்து அதில் தியேட்டரில் படம் வெளியான குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகு டிஜிட்டல் தளத்தில் வெளியிடலாம் என்று பேசி முடிக்கப் பட்டது.
இதையடுத்து நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவது தடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில வெங்கட்பிரபு தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள ஆர்கே நகர் என்ற படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படுகிறது. இப்படத்தை சரவண ராஜன் இயக்கி இருந்தார்.
படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருந்தும் அப்படத்தை வெளியிடுவதற்கு இடையூறுகள் இருந்து வந்தது. ஆர்.கே நகர் என்ற பட டைட்டில் தான் இதற்கு காரணம். சென்னையில் உள்ள அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது டிடிகே தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக தோல்வி அடைந்தது. தேர்தல் நடந்த தொகுதியின் பெயர் படத்துக்கு வைக்கப்பட்டது பட தரப்புக்கு பிரச்னையாகிவிட்டது. அதனால் தான் அப்படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்னை ஏற்பட்டதாம்.எனவேதான் ஆர்கே நகர் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் திரையிட தரப்பட்டுவிட்டது என்கிறது வெங்கட்பிரபு தரப்பு.