சினியர் நடிகைக்கு ஜோடியா? ரஜினி நடிகை மறுப்பு.. என் படத்தை நான்தான் அறிவிப்பேன்..

இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள்  சோனாக்‌ஷி சின்ஹா. லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்த இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் தமிழ் படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் அவர்  தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு  பட இயகுனர் பயோபதி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சோனாக்‌ஷி ஜோடியாக நடிக்க உள்ளதாக  சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து சோனாக்‌ஷி அளித்துள்ள விளக்கத்தில் , பயோபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் நான் நடிப்பதாக செய்தி வெளியாகிறது. அதில் உண்மை இல்லை.  

நான் நடிக்கும் அடுத்து பட அறிவிப்பை விரைவில் நானே வெளியிடுவேன்' என குறிப்பிட்டுள்ளார்.

More News >>