சாகித்ய அகடமி தர்மனுக்கு ஸ்டாலின் வாழ்த்து ட்விட்..

சாகித்ய அகடமி விருது வென்ற தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது. இதையொட்டி, அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

கரிசல் மண்ணையும் மக்களையும் குழைத்து தனது எழுதுகோலில் நுழைத்து, படைப்புகளை உருவாக்கும் சோ.தர்மனின் 'சூல்' நாவலுக்கு பரிசு கிடைத்துள்ளது அறிந்து அவரைப் பாராட்டுகிறேன்!

இப்பரிசின் மூலமாக உற்சாகம் அடைவார்; மேலும் பல படைப்புகளை வழங்குவார். வாழ்த்துகள்!இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

More News >>