விஜய் படத்தில் மற்றொரு வில்லன்.. மும்முனை தாக்குதலில் தளபதி 64..

பிகில் படத்தை முடித்த கையோடு தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனடியாக படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு தற்போதைக்கு மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் கைதி வெற்றி படத்தை இயக்கியவர்.  ஏற்கனவே விஜய்சேதுபதி இதில் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் கைதி படத்தில் நடித்த  அர்ஜூன்தாஸும் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் வில்லன் பட்டியலில் மற்றொரு  நடிகர் நாசர் இணைந்திருக்கிறார்.

இந்த கூட்டணியை பார்க்கும்போது விஜய் மீது இப்படத்தில் வில்லன்களின் மும்முனை தாக்குதல் இருக்கும் போல் தெரிகிறது.  இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சாந்தனு, ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர்.  

கர்நாடகாவில் ஷிமோகா சிறையில் விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் முக்கிய காட்சிகளை லேகேஷ் படமாக்கி வருகிறார். ஏற்கனவே சென்னை, டெல்லியில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

More News >>