ஒவ்வொரு குரலும் இந்தியாவை மாற்றும்.. பிரியங்கா சோப்ரா சொல்கிறார்..
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த வன்முறையில் போலீஸார் தாக்குதல் நடத்தினார்கள். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இதுகுறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது:
ஒவ்வொருக்கும் கல்வி என்பது நம் கனவு. ஒவ்வொரு குரலும் முக்கியமானது. சுதந்திரமாக சிந்திக்கும் அதிகாரத்தை கல்வி கற்றுத்தருகிறது. குரல் கொடுப்பதற்காகவே நாம் அவர்களை வளர்த்துள்ளோம். வளர்ந்து வரும் ஜனநாயகத்தில், ஒருவரின் குரலை அமைதியாக உயர்த்த வேண்டும்.
வன்முறையில் ஈடுபடுவது தவறு. ஒவ்வொரு குரலும் கணக்கிடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குரலும் இந்தியாவை மாற்றும் வகையில் செயல்படும்' என தெரிவித்திருக்கிறார்.