இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரஜினி, கமல், விஜய் அஜீத்.. முதலிடம் யார் தெரியுமா?
By Chandru
சர்வதேச அளவில் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெரும்பணக்காரர்கள் 100 பேரை வரிசை கிரமமாக தேர்வு செய்து அமெரிக்க வர்த்தக இதழ் போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டு வருகிறது. 2019 ம் ஆண்டில் பட்டியல் வெளியாகி உள்ளது.
100 பிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், தனுஷ் போன்றவர்கள் இடப்பிடித் திருந்தாலும் வருமானத்தை பொருத்தவரை கிரிகெட் வீரர் விராட் கோஹ்லி ரூ.252.72 கோடி வருமானத்துடன் முதலிடத்தையும் நடிகர் அக்ஷய்குமர் ரூ.283.25 கோடி வருமானம் 2வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.
3வது இடம் சல்மான் கான் (ரூ.229.25கோடி). 4வது இடம் அமிதாப்பச்சன் (ரூ.239.25 கோடி). 5வது இடம் மகேந்திர சிங் டோனி (ரூ.135.93) கோடி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 13ஆவது இடம் ஏ.ஆர். ரஹ்மான் 16ஆவது இடம்.
இவர்களுக்கு அடுத்தபடியாக மலையாள நடிகர் மோகன்லால் 27, பிரபாஸ் 44, தளபதி விஜய் 47வது இடம். தல அஜித் 52, மகேஷ்பாபு 54, இயக்குநர் ஷங்கர் 55, கமல்ஹாசன் 56, மம்முட்டி 62ஆவது இடத்திலும், நடிகர் தனுஷ் 64, இயக்குநர் சிறுத்தை சிவா 80, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 84உடங்களை பிடித்துள்ளனர்.