டென்பேக் கட்டுடலில் அசத்தும் வில்லன்.. எய்ட்பேக் ஹீரோக்கள் மிரட்சி...
சூர்யா தொடங்கி விஷால் வரை பல ஹீரோக்கள் எய்ட்பேக் வைத்து படங்களில் நடித்தனர். தற்போது அந்த பாணியை கைவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கும் ரியாஸ்கான், டென்பேக் உடற்கட்டு தோற்றம் வைத்து ஹிரோக்களை மிரள வைத்திருக்கிறார்.
'உன்ன இப்பதான அடிச்சேன்' என்று கேட்க, 'அது போனமாசம்' என்று வடிவேலு வசனம் பேசும் காமெடி காட்சி வின்னர் படத்தில் இடம்பெற்றிருக்கும். அதில் வடிவேலுவுடன் காமெடியாகவும் நடித்தவர் ரியாஸ்கான். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தனது கதாபாத்திரத்துக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
பொதுவாக ஹீரோக்கள் சிக்ஸ்பேக் வைத்துதான் பார்த்திருக்கிறோம். ஆனால் ரியாஸ்கான் இயக்குனர் மணரத்னம் இயக்கும் படத்திற்காக டென் பேக் உடற்கட்டு வைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் படபிடிப்பு தொடங்கி வெளிநாட்டில் நடந்து வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்துக்காக ஹீரோக்கள் எய்ட்பேக் வைத்திருந்தாலும் ரியாஸ்கானின் டென்பேக் கவனத்தை ஈர்த்துள்ளது. சில் ஹீரோளை மிரளவும் வைத்திருக்கிறது.