பிரபல நடிகையின் தூதர் பதவி பறிப்பு.. குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பின் விளைவு..

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டக்கார்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக இந்தி நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரிணிநிதி சோப்ரா கருத்துதெரிவித்தார்.  இதையடுத்து அவர், பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்படார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஹரியானா அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,'குறிப்பிட்ட அமைப்பின் தூதராக நடிகை பரணிதியின் ஒப்பந்தம் ஒரு வருடத்துக்கானது மட்டும்தான். கடந்த ஏப்ரல் 2017 வரையில் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதுதான் உண்மை' என தெரிவித்திருக்கிறார்.

நடிகை பரிணிநிதி சோப்ரா டிவிட்டரில் கூறும் போது,'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடக்கிறது. போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசி, துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை அடக்கி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை பரிணிதி சேப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில், 'தங்கள் கருத்துக்களை மக்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் இது நடந்தால் குடியுரிமை திருத்த மசோதாவை மறந்து விடுங்கள்.

நாம் ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும், இனி நம் நாட்டை ஜனநாயக நாடு என்று அழைக்க மாட்டோம். அப்பாவி மக்கள் மனதைப் பேசியதற்காக தாக்கப்படுகிறார்களா? இது காட்டுமிராண்டித்தனம்' என தெரிவித்திருக்கிறார்.

More News >>