காதலனை மணந்த நடிகை ரிச்சா திடீர் கோபம்.. எனக்கு ரகசிய திருமணம் நடந்ததா...?
ஒய்தி, தனுஷ் ஜோடியாக மயக்கம் என்ன 2 படங்களில் மட்டுமே நடித்த ரிச்சா திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டார். ரிச்சாவுக்கு திரையுலகில் சிலர் காதல் வலை வீசியபோது அதிலிருந்து தப்பிக்கவே நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்தார். இங்கிருந்து அமெரிக்கா பறந்து சென்றவர் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் அங்கு அவரை காதல் விடவில்லை.
வகுப்பில் தன்னுடன் படித்துவந்த அமெரிக்கவை சேர்ந்த ஜோ லாங்கெல்லாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். சமீபததில் திருமணமும் செய்துகொண்டனர். ஆனால் அவரது திருமண செய்தி சில தினங்களுக்கு முன்தான் அம்பலமானது. இதையடுத்து ரிச்சா ரகசிய திருமணம் செய்துகொண்டதாக நெட்டில் தகவல் பரவியது.
ரகசிய திருமணம் என தகவல் பரவியது ரிச்சா காதுக்கு சென்றது. இதனால் கோபம் அடைந்தவர் எனக்கா ரகசிய திருமணம் நடந்தது என்று கோபமாக கேட்டிருக்கிறார்.எங்கள் இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள் விழாவில் கலந்துகொள்ள இந்தோ, அமெரிக்க முறைப்படி நான்கு விதமான விழாக்களுடன் எங்கள் திருமணம் தாம்தூம் என்று நடந்தது. அதுவும் கடந்த செப்டம்பர் மாதமே இது முடிந்துவிட்டது.
ஆனால் நேற்றைக்குதான் ரகசிய திருமணம் செய்துகொண்டதுபோல் செய்திகள் வருகிறது. உறவினர்கள், நண்பர் முன்னிலையில் நடந்த திருமணத்தில் ரகசியம் எங்கிருந்து வந்தது' என பொங்கி எழுந்துவிட்டார்.