ரஜினி நடிக்கும் 2 பெண்டாட்டி கதை? ஐதராபாத்தில் ஷூட்டிங்..
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் அடுத்த மாதம் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். பெயரிடப்படாத இப்படத்திற்கு தலைவர் 168 என தற்காலிக தலைப்பாக கூறி வருகின்றனர்.
இதில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா நடிக்கின்றனர். ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் கிராமத்து பின்னணி கதையாக இது உருவாக உள்ளது. மேலும் ரெண்டு பெண்டாட்டிகாரராக ரஜினி நடிக்கிறார் என்று தகவல் கசிகிறது..
படம் பற்றி இயக்குனர் சிறுத்தை சிவா கூறும்போது,'விஸ்வாசம்போல் இப்படமும் கிராமத்து பின்னணியில் குடும்ப செண்டிமெண்ட், லவ் ஆக்ஷன், எண்டர்டெயின் மென்ட்டுடன் கூடிய படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.