அரசியல்படத்தில் அமீருக்கு ஜோடியாகும் சாந்தினி.. நாற்காலி”யை இயக்கும் துரை..  

மெளனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆதிபகவன் படங்களை இயக்கிய அமீர் யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் பிரதான வேடமொன்றில் நடித்திருந்தார்.

அடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் நாற்காலி. இதில் அரசியல்வாதி வேடம் ஏற்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வந்தது. தற்போது ஜோடியாக சாந்தினி நடிக்க தேர்வாகி உள்ளார்.

நாற்காலி படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். இவர் அஜீத் நடித்த முகவரி, விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சுந்தர்.சி நடித்த இருட்டு படங்களை இயக்கியவர். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அஜயன் பாலா வசனம் எழுதுகிறார். இப்படத்தில் அமீர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார்.

More News >>