விஜய்யுடன் கைதி வில்லன் மோதல்.. சிமோகாவுக்கு புறப்பட்டு சென்றார்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி. இப்படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். தளபதி 64 என்ற உத்தேச டைட்டிலுடன் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார், விஜய்சேதுபதி, நாசர், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன்தாஸும் பிரதான வில்லன்களில் ஒருவராக இப்படத்தில் நடிக்கிறார். தற்போது கர்நாடகாவில் சிமோக சிறையில் இதன் படப் பிடிப்பு நடந்து வருகிறது.

அதில் பங்கேற்று விஜய்யுடன் சண்டை காட்சிகளில் மோதுவதற்காக அர்ஜுன்தாஸ் புறப்பட்டு சென்றிருக்கிறார். அதனை அவர் ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

More News >>