யஷ் நடிக்கும் கேஜிஎப் சேப்டர் 2... படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட டீம்..  

கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப்.  யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார், இப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது. இப்படத்தின் 2ம் பாகம் 'கேஜிஎப் சேப்டர் 2' பெயரில் உருவாகி வருகிறது.

கேஜிஎப் திரைப்படம்  வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில் கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்தூண் ஒன்றை தொழிலாளர்களுடன் சேர்ந்து யஷ் தோளில் கட்டி இழுத்துவருவதுபோல் போஸ்  இடம் பெற்றுள்ளது. அதற்கு ஏகத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

More News >>