அஜீத் மகள் அனோஷ்கா பாடிய பாடல் நெட்டில் வைரல்.. குடும்பம் என்றதும் சராசரி தந்தையாகிவிடும் தல..
நடிகர் அஜீத் படங்களில் நடிப்பது ஒரு பக்கமிருந்தாலும் குடும்பத்துக்கும் போதுமான நேரம் ஒதுக்க தவறுவதில்லை. மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக்குமார் ஆகியோருடன் நேரம் செலவழிப்பது.
பள்ளியில் பெற்றோர் மீட்டிங் என்றால் மனைவியுடன் சென்று கலந்து கொள்வது. குழந்தைகள் கலைவிழாவில் பங்கேற்பது, அவர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதை புகைப்படம் எடுப்பது என சராசரி தந்தையாக மாறிவிடுகிறார்.
அஜித்தின் மகள் அனோஷ்கா. பள்ளியில் நடந்த கிறிஸ்மஸ் விழா ஒன்றில் பாடல் பாடி அசத்தினார். அவர் பாடல் பாடும் வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது.