29ம் தேதி அமிதாபிற்கு தாதா சாகேப் விருது.. ஜனாதிபதி வழங்குகிறார்..
By Chandru
சிறந்த நடிகர், நடிகைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. சாவித்ரி வாழ்க்கையாக உருவான மகாநடி தெலுங்கு படத்தில் சிறந்த நடிப்பை வெளியிட்டதற்காக சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார்.
வழக்கமாக தேசிய விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். இம்முறை அவர் வேறுவொரு விழாவில் அவர் பங்கேற்றதால் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.
உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல் நலமில்லாததால் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதையடுத்து வரும் 29ம் தேதி ஜனாதிபதி மாளிகையல் விருது பெற்ற கலைஞர்களுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்தளிக்கிறார்.
அப்போது அமிதாப்பச்சனுக்கு விருது வழங்கி கவுரவிப்பார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.