தனுஷ் படத்தில் மற்றொரு ஹீரோ.. வில்லன் வேடத்தில் நடிக்கிறார்..

பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தனுஷுக்கு வில்லனாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் நடிக்கவிருக்கிறார். இவர் சதுரங்க வேட்டை, மிளகாய் படங்களில் கதாநாயனாக நடித்தார். இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் விஜய் நடித்த புலி படத்துக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினர். தற்போது தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படப்பிடிப்பு முடிந்துவிட்டு ஜனவரி முதல் மாரி செல்வராஜ் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் தனுஷ்.
More News >>