அருவி அதிதி தந்த அதிர்ச்சியம் ஆச்சர்யமும்.. சினிமா பட விழாவில் கவர்ச்சி விருந்து..
எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்க வேண்டும் என்று பல நடிகைகளிடம் கேட்டபோது மறுத்த நிலையில் அப்படத்தில் தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டார் அதிதி பாலான்.
அருவி என்ற பெயரில் வெளியான இப்படம் படத்துக்கு வசூலை அள்ளித்தந்ததுடன் அதிதிக்கு பாராட்டையும் அள்ளிக்குவித்தது. முதல் படத்திலேயே கனமான வேடம் என்று நடித்திருந்த அதிதிக்கு அடுத்தடுத்தும் அதேபோல் கனமான வேடங்களில் நடிக்கவே ஆசை இருந்தது. இதனால் கமர்ஷியல் நாயகியாக நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார். இதுபோல் 20க்கும் மேற்பட்ட படங்களை அவர் மறுத்தநிலையில் அவரை அணுகுவதை நிறுத்திவிட்டனர்.
வரிசையாக கால்ஷீட்டுக்காக காத்திருந்த இயக்குனர்கள் ஒருவரும் கதை சொல்ல வராமலிருந்த நிலையில் மலையாளத்திலிருந்து பட வாய்ப்புவந்தது. அதை ஏற்றுக்கொண்டு நடித்து வருகிறார். சினிமா என்றாலே போட்டி நிறைந்த வுலகம் என்பதை புரிந்துகொண்டவர் தற்போது கவர்ச்சிக்கு கதவு திறந்துவிட்டிருக்கிறார்.
எந்நேரமும் சேலையை இழுத்துபோர்த்தியபடி போஸ் தந்துக்கொண்டிருந்த அதிதி ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் பட்டன் அணியாக ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவரது ரசிகர்களோ திடீரென்று கவர்ச்ச அவதாரம் எடுத்த அதிதியை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.