விஷ்ணு விஷால் புது தகவல்.. இந்த ஆண்டுடன் சிகரெட் புகைப்பதை.. 

வெண்ணிலா கபடி குழு விஷ்ணு விஷாலுக்கு ராட்சசன், சிலுக்குவாருப்பட்டி சிங்கம் படங்கள்  பெரியஅளவில் கைகொடுக்கவே தற்போது கைநிறைய படங்களில் நடிக்கிறார்.

இருமொழி படமான காடன், கவுதம் மேனன் உதவியாளர் இயக்கும்  எப் ஐ ஆர், மற்றும் இன்று நேற்று நாளை 2, விக்ராந்த்துடன் நடிக்கும் படம் என தன்னை அடுத்த இரண்டு வருடத்துக்கு பிஸியாகிக்ணெ்டிருக்கிறார்.  இது தவிர இயக்குனர்கள் செல்வா, வசந்த பாலன் இயக்கும் படம் என வரிசையாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு (2019) விஷ்ணு விஷாலுக்கு திருப்திகரமாகவே அமைந்தது. அந்த குஷியில் அடுத்த ஆண்டு தொடக்கம் நெருங்கி வரும் நிலையில் அவர் ஒரு டிவிட் மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.

'இந்த ஆண்டுடன் சிகரெட் புகைப்பதை நிறுத்தி விட்டு ஆரோக்கியமான 2020 ம் ஆண்டில் நுழையுங்கள். புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு' என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.  

More News >>