சியான் விக்ரம் 58வது பட டைட்டில் கோப்ரா.. வீடியோ வெளியிட்டு அறிவிப்பு..

கடாரம் கொண்டான் படத்தையடுத்து சியான் விக்ரம் நடிக்கும் 58வது படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக  ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார்.

முக்கிய வேடமொன்றில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.படத்தின் டைட்டில் என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

சில மணிநேரத்துக்கு முன்  படக் குழு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.  அதில்  படத்தின் டைட்டில் 'கோப்ரா' என தெரிவித்துள்ளது. வரும்  கோடை விடுமுறையில் படம் வெளிவர உள்ளது.

More News >>