தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி பாராட்டு.. தலைவர் 168 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்..

பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை சரித்திரம் தெலுங்கில் மகாநடி பெயரில் உருவானது. இதேபடம் தமிழில் நடிகையர் திலகம் பெயரில் டப்பிங் ஆனது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

மகாநடிபடத்தில் சிறந்த நடிப்பை வெளியிட்டிருந்த கீர்த்தி தேசிய விருதுக்கு தேர்வாகியிருந்தார். நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த விழாவில் விருதினை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.    

முன்னதாக ரஜினி நடிக்கும் சன்பிக்சர்ஸின் 168 படத்திலும் நடிக்க தேர்வாகியிருந்தார் கீர்த்தி.  இன்று அவர் படப்பிடிபில் கலந்துகொண்டார். அவருக்கு ரஜினி. டைரக்டர் சிறுத்தை சிவா  உள்ளிட்டவர்கள் வாழ்த்து கூறினார்கள். பின்னர் கேக் வரவழைத்தனர். அதனை கீர்த்தி வெட்டி கொண்டாடினார். கீர்த்திக்கு ரஜினி கேக் ஊட்டி பாராடினார்.

More News >>