இயக்குனரை மணக்கும் நடிகை மிருதுளா.. பாவனா, ரம்யா நம்பீஸன் வாழ்த்து..

நாகாராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ, சிக்குன்னு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் மலையாளத்தில் ரெட் சில்லிஸ், எலசம்மா என்ன ஆண்குட்டி போன்ற படங்களிலும் நடித்தவர் மிருதுளா முரளி. இவர் ராக்தேஷ் இந்தி படத்திலும் நடித்திருக்கிறார்.

மலையாள திரைப்பட இயக்குனர் நிதின் விஜய்யும் மிருதுளாவும் காதலலித்து வந்தனர். அதற்கு இரண்டு குடும்பத்தாரும்  சம்மதம் தெரிவித்து  திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதையடுத்து  இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கேரளா மாநிலம் கொச்சியில் நடந்தது.

நடிகை  மிருதுளாவின் நெருங்கிய தோழிகளும் நடிகைகளுமான  பாவனா, ரம்யா நம்பீசன், சில்பா, சரண்யா மோகன் மற்றும் நடிகர் விஜய் யேசுதாஸ் போன்றவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

More News >>