ரஜினியின் தர்பார் 2மணி 37 நிமிடம்.. மோதலை தவிர்த்த தனுஷ் படம்..

ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்,முருகதாஸ் இயக்குகிறார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு முன்னதாக ஜனவரி 9-ம் தேதியே இப்படம் வெளியாகிறது.

தர்பார் படம் திரையில் எவ்வளவு மணி நேரம் ஓடும் என்று தெரிய வந்திருக்கிறது. 2 மணி நேரம் 37 நிமிடங்களுக்கு ரஜினியின் தர்பார் திரையில் நடக்கும்.

தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படமும் தர்பார் வெளியாகும் அதேநாளில் வெளியாகும் என்றுகூறப்பட்டு வந்தது. இரண்டு படங்களின் மோதலை தவிர்கும் விதமாக தற்போது பட்டாஸ் படம் தர்பார் வெளியாகி 5 நாட்கள் தள்ளி அதாவது 14ம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.இரண்டு படமும் வெற்றி அடைய ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

More News >>