என் காதலை வெளியே சொன்னது தவறாகபோய் விட்டது.. நடிகை ஆண்ட்ரியா பல்டி..
நடிகை ஆண்டரியா, ப்ரோக்கன் விங் என்ற கவிதை புத்தகம் எழுதி வெளியிட்டார். அதுபற்றி அறிவித்த போது தன்னை தொழில் அதிபர் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார், என் வாழ்க்கையை கெடுத்தார். அவர் யார் என்பதை என் புத்தகத்தில் தெரிவிப்பேன் என்றெல்லாம் பேட்டி அளித்திருந்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரையும் நடிகர் ஒருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இந்தவிஷயம்பற்றி ஆண்ட்ரியா மீண்டும் பேட்டி எதுவும் அளிக்கவில்லை. தற்போது ஆண்ட்ரியா அந்தர்பல்டியடித்து, நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபற்றி ஆண்ட்ரியா கூறியது:
கடந்த 10 ஆண்டுகால எனது அனுபவத்தில் பலவித பாடங்களை கற்றுக்கொண்டேன். காதல் தோல்வி அடைந்தேன். அந்த ஏமாற்றமும் என்னை கவலை கொள்ளச்செய்தது. இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்ற போது அங்கிருந்தவர்களிடம் எனது வாழ்க்கை கதையை உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்துகொண்டேன். அதுதான் வெவ்வேறு விதமாக வெளியாகி உள்ளது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதுதான் நான் செய்த தவறு. என்னை நடிகர் ஒருவருடன் இணைந்து கிசுகிசு பரப்பப்பட்டது. அதெல்லாம் உண்மை இல்லை. பொய்யான ஒரு தகவலுக்கு எதற்காக மறுப்பு சொல்ல வேண்டும் என்பதால்தான் நான் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தேன்.
ஒரு விஷயம் மட்டும் நன்றாக தெரிகிறது பலருக்கும் தெரிந்த பிரபலங்கள் தங்களின் கதைகளை பொதுவானவர்கள்போல் யாரும் பகிர்ந்துகொள்வது போல் அவ்வளவு எளிதாக வெளியில் சொல்ல முடியாது என்பது புரிகிறது.
தற்போது நான் தளபதி 64 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த உள்ளேன்.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறி உள்ளார்.