ஹீரோவை ராஷ்மிகா திருமணம் செய்ய மறுத்தது ஏன்? காதல் நடிகரும் வெளிப்படங்களுக்கு குறி...

விஜயதேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா. இப்படங்கள் வெற்றி அடைந்ததையடுத்து விஜய தேவரகொண்டாவும், ராஷ்மிகாகவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இதில் கோபம் அடைந்த ராஷ்மிகா இன்னும் 2 வருடத்துக்கு விஜயதேவரகொண்டாவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

ஆனால் அதற்கு முன்னரே கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகா திருமணம் நிச்சயமாகவிருந்தது. இருவரும் காதலித்து திருமணம்செய்துகொள்ள முடிவு செய்த நிலையில் திடீரென்று திருமணம் செய்துகொள்ள மாட்டேன் விலகி வந்தார் ராஷ்மிகா. இந்த விஷயத்தில் ரக்‌ஷித் ஷெட்டிக்குத்தான் காதல் தோல்வியும், ஏமாற்றமும் ஏற்பட்டது.

ரக்‌ஷித்தை மணக்காமல் திருமணத்தை ரத்து செய்தது பற்றி ராஷ்மிகாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறும்போது,'சினிமாவில் வளர்ந்து வரும் நிலையில் சினிமா சம்பந்தபட்ட யாரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்றுதான் எண்ணியிருந் தேன். ஆனால் ரக்‌ஷித் ஷெட்டியுடன் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது.

திருமணம் செய்ய நிச்சயார்த்தம் நடந்தபோது இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று வெளியேறிவிட்டேன் என்று வெளியேறிவிட்டேன். 2 வருடம் கழித்து திருணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணியபோது அதற்குள் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது. அவற்றை ஒப்புக்கொண்டேன். திருமணம் செய்துகொண்டால் ஒப்புக்கொண்ட படங்கள் பாதிக்கும், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படு வார்கள் என்று எண்ணினேன். கடைசியாக 2 ஆண்டுக்கு திருமணம் செய்துகொள்வதில்லை என்று முடிவு செய்தேன். முழுவேகத்தில் நடித்து வருகிறேன்.

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

கன்னட நடிகை ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியும் திருணம் செய்துகொள்ளாத நிலையில் அவர்கள் வேற்று மொழியில் தங்களின் கவனத்தை திருப்பியிருக்கின்றனர். ஏற்கனவே ராஷ்மிகா விஜயதேவரகொண்ட படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது கார்த்தி ஜோடியாக நடித்து தமிழிலும் அறிமுகமாகிறார். அதேபோல் ரக்‌ஷித் ஷெட்டி கன்னடத்தில் நடித்துள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா என்ற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளிலும் வெளியிட்டு பிறமொழி படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

More News >>