நடிகை மும்தாஜ் மார்கெட்டை குளோஸ் செய்த பிஆர்ஓ. நடிகர் பாபு கணேஷ் தாக்கு..
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செய்து நோயாளிகளை குணப்படுத்துவார் கமல்ஹாசன். அதற்கு முன்பே, கட்டிப்புடி கட்டிபுடிடா என்று கவர்ச்சி ஆட்டம் ஆடி கட்டிபுடி வைத்தியத்தை பரப்பியவர் மும்தாஜ். சில்க் ஸ்மிதாபோல் தமிழில் ஒரு இடத்தை பிடிப்பார் என்று பலரும் எண்ணிய நிலையில் வந்த வேகத்தில் காணாமல் போய் விட்டார்.
370 என்ற படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. இப்படம் 48 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு கின்னஸில் இடம்பிடிக்க உள்ளது. பாபுகணேஷ் இயக்குகிறார். அவரது மகனும், ஆசிய அளவில் பாடிபில்டிங் போட்டியில் தங்கம் வென்றவருமான ரிஷிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். வங்காள நடிகை மேகாலி ஹீரோயினாக நடிக்கிறார். இதில் ரிஷா, திருநங்கை நமீதா, வெற்றி, பவர் ஸ்டார், புதுமுகம் போகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டைரக்டர் பாபு கணேஷ் கூறியதாவது:
இப்படத்துக்காக நடிக்க கேட்டபோது எல்லோரும் மனம் உவந்துஒப்புக்கொண்டனர். ஆனால் படப்பிடிப்பு 48 மணி நேரத்தில் முடிக்கப்படுகிறது என்று சொன்னபோது அவர்களால் நம்ப முடிய வில்லை. கின்னஸ் சாதனையில் இது இடம்பெறப் போகிறது. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வீதம் 8 நாட்களில் இப்படத்தைமுடிக்கப்போகிறேன் என்று படப்பிடிப்பு நடக்கும்விதம் பற்றி சொன்னபிறகு அனைவரும் நம்பினார்கள். தற்போது 6 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவிட்டது.
நடிகரோ, நடிகையோ யாராக இருந்தாலும் தங்களின் கால்ஷீட் விஷயம்பற்றி நேரடியாக தயாரிப்பாளர், இயக்குனரிடம் பேச வேண்டும். அவர்களது பிஆர்ஒ விடம் பேசினால் வேலைக்காகாது. இப்படித்தான் மும்தாஜ் என்ற நடிகை இருந்தார். அவரது பட வாய்ப்பு அவரது பிஆர்ஓவினா லேயே பறிபோனது.
மும்தாஜின் பிஆர்ஓவிடம் மும்தாஜிடம் பேச வேண்டும் என்றபோது அவர் ஊரில் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர் மும்தாஜை ஒரு விழாவில் சந்தித்தபோது நான் ஊரில்தானே இருந்தேன் என்று கூறினார். நேரடியாக தயாரிப்பாளரிடம் பேசாததால் இன்று மும்தாஜ் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
இவ்வாறு பாபு கணேஷ் கூறினார்.