மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிக்க தயார்.. மாஜி கணவர் திலீப் திடீர் விருப்பம்..
நடிகர் திலீப், நடிகை மஞ்சுவாரியர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டு களுக்கு முன் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிகை காவ்யா மாதவமனை மறுமணம் செய்துகொண்டார் திலீப்.
மஞ்சுவாரியர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஒருவர் கடத்தி பாலியல் தொல்லை தரப்பட்ட வழக்கில் திலீப் கைதாகி பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார். சமீபத்தில் அவர் நடிகையின் பாலியல் தொல்லை தொடர்பான வீடியோ பார்க்க கோர்ட்டில் அனுமதி பெற்று பார்வையிட்டார்.
இந்நிலையில் திலீப் பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கும்போது,'கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது அது சம்பந்தமாக எதுவும் கூற முடியாது. எனது முன்னாள் மனைவி மஞ்சுவாரியரிடம் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை. பொருத்தமான கதை கிடைத்தால் அவருடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கி றேன். சினிமா பெண்கள் கூட்டமைப்பு பற்றி கேட்கிறார்கள். அதில் இருப்பவர்களும் எனது சக நடிகைகள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மலையாள திரையுலகில் போதை மருந்து பயன்பாடு இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என்றார்.
திலீப் மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் ராஜ்யம் படத்தில் விஜயகாந்த் துடன் நடித்திருந்தார். மஞ்சுவாரியரும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக் கிறார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த் அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக தமிழிலும் நடித்திருந்தார்.