குடியுரிமை திருத்த சட்டம் பற்றி கருத்துசொல்லும் அளவுக்கு அறிவு பெறவில்லை.. நடிகை டாப்ஸி நழுவல் பதில்.
நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடுமுழு வதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.
நடிகை டாப்ஸியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களை கண்டித்திருக்கிறார். பாலியல் பலாத்கார செயல்களில் ஈடுபடுபவர் களையும் கடுமையாக கண்டித்திருக்கிறார். எல்லா பிரச்னைகளுக்கும் கருத்து சொல்லும் அவரிடம் மத்திய அரசு நிறைவேற்றி உள்ள குடியுரிமை திருத்த சட்டம்பற்றி கருத்து கேட்கப்பட்டது.
அதுபற்றி அவர் கூறும்போது.' எந்தவொரு விஷயத்தைபற்றியும் கருத்து சொல்வதற்கு முன் அதுபற்றி முதலில் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி எனக்கு முழுமையாக தெரியாதது மட்டுமல்ல கருத்தும் சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவும் கிடையாது. அதுபற்றி எதுவும் பேச விரும்பவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. ஏதோவொரு பெரிய விஷயம் நடக்கிறது'என்றார்.