கமலின் பழைய படத்துக்கு புதுசா ஒரு டிரெய்லர்.. ரசிகர்கள் வரவேற்பு..
புது படங்களுக்கு டீஸர், டிரைலர் ரிலீஸ் செய்யும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் பழைய படம் ஒன்றுக்கு தற்போது டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த 2004ம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்து வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் வெளியானது, சுமார் 15 வருடத்துக்கு பிறகு தற்போது இப்படத்துக்கு டிரெய்லர் தயாராகி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று கேட்டு ஆச்சரியப்படுகின்றனர். அதற்கு காரணம் இதுதான்,
'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தை சன்நெக்ஸ்ட் செயலி விரைவில் வெளியிட உள்ளது. அதற்காகத் தான் இந்த புதிய டிரெய்லர் தயாரித்து நெட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் அதற்கு வரவேற்பு கொடுத்திருக்கின்றனர்.