அஜீத், வலிமை படத்திலிருந்து யுவன் விலகல் தகவலால் பரபரப்பு.. படக்குழு விளக்கம்..
தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடக்கிறது. படப்பிடிப்பு தொடங்கி இரண்டு வாரம் ஆகியும் கதாநாயகி முடிவாகவில்லை. நயன்தாரா. ரகுல் பிரீத் சிங்.
இலியானா, பரினிதி சோப்ரா என பல நடிகைகள் பெயர் அடிபட்டாலும் யார் ஹீரோயின் என்பதை இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை அஜீத் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாகி வருகிறது.இநிலையில் இப்படத்துக்கு இசை அமைப்ப தாகவிருந்த யுவன் சங்கர் ராஜா திடீரென்று படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
அவருக்கு பதிலாக டி,இமான் இசை அமைக்க உள்ளார் என்று தகவல் பரவியது. அதனை படக்குழு மறுத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திலிருந்து விலகவில்லை அவர்தான் வலிமை படத்துக்கு இசை அமைக்கிறார் என்று தெரிவித்துள்ளது.