48 மணிநேரத்தில் உருவாகும் படம் 370.. வங்காள நடிகை மெகாலி ஹீரோயின்..
48 மணிநேரத்தில் புதியதமிழ்படம் உருவாகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு, இயக்கம் என மொத்தம் 14 தொழில் நுட்ப பொறுப்புக்களை எற்றிருக்கிறார் பாபு கணேஷ்.
ரிஷிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் உலக அளவில் ஆணழகன் போட்டியில் 6வது இடத்தில் இருக்கிறார். கதாநாயகியாக பெங்கால் நடிகை மேகாலி நடிக்கிறார்.
இதில் பவர்ஸ்டார் சீனிவாசன், புதுமுகம் போகிபாபு. ரிஷா. திருநங்கை போட்டியில் உலக அழகி பட்டம் வென்ற நமீதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
370 படம் பற்றி பாபுகணேஷ். கூறியது: நாட்டுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாத கும்பலை பயிற்சிபெற்ற குழு ஒன்று எப்படி அழிக்கிறது என்பதே கதை.
8 நாட்களில் தினமும் 6 மணிநேரம் வீதம் படப்பிடிப்பு நடக்கிறது. மொத்தம் 48 மணி நேரத்தில் படப்பிடிப்புமுழுவதுமாக முடிவடைகிறது. இதுவரை 6 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படம் கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்கும் என்பது நிச்சயம்.