ராணுவத்திற்கும் அரசியலுக்கும் வெகுதூரம்.. முப்படைத் தளபதி பேட்டி

ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை. நாங்கள் அரசு உத்தரவுப்படி செயல்படுகிறோம் என்று முப்படைத் தளபதி பிபின் ராவத் விளக்கம் தெரிவித்தார்.

தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக முப்படைத் தளபதி பதவியை புதிதாக மத்திய அரசு உருவாக்கியுள்ளது. முதலாவது முப்படைத் தளபதியாகவும்,பிரதமரின் முக்கிய ஆலோசகராகவும் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார்.

 

முன்னதாக, அவர் ராணுவத் தளபதியாக இருந்த போது, ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மாணவர்களை போராட்டத்துக்கு வழி நடத்திச் செல்பவர்கள் சரியான தலைமையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் போராடி வரும் வேளையில் ராணுவத் தளபதி இப்படி கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ராணுவத் தளபதி அரசியல் பேசலாமா என்று கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், முப்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள பிபின் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பேன். மூன்று படைகளும் ஒரு குழுவாக செயல்படுவோம். ஒருங்கிணைந்து செயல்படுவது அதிக பலனைத் தரும். நாங்கள் அரசியலில் இருந்து வெகுதூரம் ஒதுங்கி இருக்கிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதற்கு ஏற்ப பணியாற்றி வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

 

More News >>