டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி வெளியீடு..

தமிழக அரசு குரூப்-1 பணிக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.வருவாய்த்துறையில் கோட்டாட்சியர்(ஆர்டிஓ) மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளில் குரூப்-1 அதிகாரிகள் பணிக்கான தேர்வு அறிவிக்கையை 2020 டி.என்.பி.எஸ்.சி இன்று(ஜன.1) வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு ஜன.20ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

More News >>