பொன்னியின் செல்வன் படத்தின் முதல் போஸ்டர் -மெட்ராஸ் டாக்கீஸ்

             வரலாற்று சிறப்பு மிக்க படைப்பான கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை மையமாக கொண்டு மணிரத்தினம்  இயக்கும்  படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிகின்றது.மேலும் தென்னிந்திய திரையுலகின் பல ஜாம்பவான்கள் நடிக்கும் இப்படம் தமிழன் பெருமையையும் தமிழகத்தின் அழகையும் கண்முன்னே கொண்டுவரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் போஸ்டர் தமிழ் மொழியில் இடம்பெறாதது வருத்தம்தான்.

                மூன்று சிங்கங்களின் கர்ஜனையோடு   மின்னுகின்ற வாள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.அதோடு கலை,நடனம் மற்றும் சண்டை பயிற்சி இயக்குனர்களின் தகவல்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜெயமோகனின் உரையாடல்கள் மேலும் இப்படத்தை மெருகுட்டுவதாக விளங்கும்.இப்போஸ்டரை மெட்ராஸ் டாக்கீஸ் தன் அதிகாரப்பூர்வ டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இன்னும் படப்பிடிப்பு தொடர்வதால் ரீலிஸ் தேதி முடிவு செய்யப்படவில்லை.  

 

More News >>