மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்ட அமெரிக்கா-ஈரானில் கொந்தளிப்பு

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் ஈரானியர்களால் தாக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் மூத்த படைத்தளபதி கிஅஸ்ஸெம் சொலெய்மணி நேற்று அமெரிக்க துருப்புகளால் ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

 

யார் இந்த சொலெய்மணி?

ஈரானின் முக்கிய தளபதியான கிஅஸ்ஸெம் சொலெய்மணி மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பிரபலமானவர்.வெளிநாட்டு ரகசிய தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் மேலும் ஈரானின் அதிபராவதற்க்கான வாய்ப்புகள் இவர்க்கு அதிகமாகவே இருந்தது எனலாம் .இந்நிலையில் கடந்த டிசம்பர் 31 அன்று ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்க தூதரகத்தை தரைமட்டமாக்கியத்தில் இவரின் பங்கு முக்கியமானதாக கருதப்பட்டது.

மேலும் கடந்த சில மாதங்களாக ஈராக்கில் நடந்த தாக்குதல்களுக்கும் இவரின் தலையீடு இருப்பதை அமெரிக்கா கண்டறிந்து ஈரானின் தலைவர்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது.அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் மீண்டும் அதின் தூதரகத்தை தாக்கியது அமெரிக்காவின் கோபத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்தது.

எங்கு கொல்லப்பட்டார்:

      கொஞ்சமும் காலம் தாழ்த்தாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கிவிட்டது.இதனால் நேற்று ஈராக்கிலுள்ள பாக்தாத் விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி ட்ரோன் மூலம் சொலெய்மணி வாகனத்தை அமெரிக்கா தகர்த்தது.இந்த தாக்குதல்களில் அவரோடு பயணித்தவர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த பழிவாங்கும் நடவடிக்கை ஈரானியர்களிடையே அமெரிக்கா மீதுள்ள கோபத்தை அதிகரித்ததோடு அமெரிக்காவின் தேசியக்கொடியை தீயிட்டு கொழுத்த வைத்துள்ளது.

அரசியல் நோக்கம்:

              

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த பழிவாங்கும் தாக்குதலை முன்னெடுத்தது இந்தியாவின் நாடுளுமன்ற தேர்தலுக்கு முன் காஸ்மீரில் அரங்கேறிய தீவிரவாத தாக்குதலில் நாற்பதுக்கும் மேலான வீரர்களின் மரணம் நம் கண்முன்னே வருகிறது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு ஒரு வித்தாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

More News >>